கிராம சபை கூட்டத்தின் மூலம் மக்களை ஏமாற்றும் ஸ்டாலின்.. வெளுத்து வாங்கிய எடப்பாடி..!
மு.க.ஸ்டாலினின் கனவு ஒருநாளும் பலிக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஈரோடு, ஜன-6

ஈரோடு மாவட்டம் பவானியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். பிரசார கூட்டத்தில் அவர் கூறியதாவது:
தி.மு.க-வின் மக்கள் கிராம சபை கூட்டத்தால் பலனில்லை. வேளாண் பணி சிறந்து விளங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. கிராம சபை கூட்டத்தின் மூலம் மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின். அரசு, முதலமைச்சரை குறை சொல்வதே ஸ்டாலினின் வாடிக்கையாக உள்ளது. மக்களை குழப்பி அதில் அரசியல் செய்கிறார் ஸ்டாலின்; அவர் கனவு பலிக்காது. அவரது கனவு எப்போதும் கானல் நீராகவே இருக்கும். மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தும் ஸ்டாலின் மக்களுக்கு என்ன நன்மை செய்தார். ஸ்டாலினிடம் மக்கள் கொடுத்த மனுக்களை எங்களிடம் அவர் ஒப்படைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.