குழந்தை சுஜித் மீட்பு நடவடிக்கை மீண்டும் தீவிரம்

திருச்சி.அக்டோபர்.28

 ஆழ்துளை கிணற்றில்  85 அடியில் சிக்கியுள்ள இரண்டு வயது குழந்தை சுஜித்தை  மீட்க   தோண்டபட்ட குழியில் 5 இடங்களில்  65 அடி ஆழத்துக்கு ஃபோர்வெல் இயந்திரம் மூலம் துளையிடப்பட்டு மீட்புபணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் சிக்கி உள்ள 2 வயது குழந்தை சுஜித்தை மீட்பதற்கு ரிக் இயந்திரத்திற்கு பதில் போர்வெல் இயந்திரத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணி தொடங்கி நடைபெற்றது.. முன்னதாக தோண்டப்பட்டுள்ள 45 அடி பள்ளத்திற்குள் தீயணைப்பு வீரர் ஒருவர் அனுப்பப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது.

85 அடியில் சிக்கி உள்ள சுஜித் மீட்க 98 அடிக்கு பள்ளம் தோண்டும் பணி நேற்று காலை முதல் நடந்து வருகிறது. ஆனால் பாறைகள் கடினமாக இருந்ததால் இதுவரை 45 அடி மட்டுமே தோண்டப்பட்டுள்ளது. முதல் ரிக் இயந்திரம் மூலம் 35 அடியும், 2வது ரிக் இயந்திரம் மூலம் 10 அடியும் தோண்டப்பட்டது. பாறை கடினமாக இருந்த போதிலும், 40 அடிக்கு மேல் கரிசல் மண் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டதால், தொடர்ந்து பள்ளம் தோண்டப்படுவதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஆனால் 45 அடி பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் 2வது ரிக் இயந்திரத்தில் மீண்டும் பழுது ஏற்பட்டது. இதனால் பள்ளம் தோண்டும் பணி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

கடினமான பாறைகள் என்பதால் அவற்றை உடைக்க ரிக் இயந்திரத்திற்கு பதிலாக போர்வெல் இயந்திரத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு  துளையிடும் பணி நடைபெற்றது. 1 மீட்டர் சுற்றளவில்  45 அடிக்கு தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில்  5 இடங்களில் 65 அடி ஆழத்திற்கு துளையிடப்பட்டது. இதனையடுத்து  மீண்டும் ரிக் இயந்திராத்தால்  அகலப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.  குழந்தை  மீட்புபணி  மீண்டும் தொடங்கி உள்ளது மீட்புகுழுவுக்கு  நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

 மீட்புபணி நடைபெறும் இடத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் முகாமிட்டு நடவடிக்கை மேற்கொண்டு உள்ள நிலையில், துணை முதலமைச்சர்  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  நேரில் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டார். உடன் அவரது மகனும், எம்.பி.,யுமான ரவீந்திரநாத்தும் வந்திருந்தார். மேலும் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன். முன்னாள் மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் துரை கண்ணு உள்ளிட்ட பலர்  மீட்பு பணி நடைபெறும் இடத்திற்கு வருகை தந்து வண்ணம் உள்ளனர்.

 சிறுவன் சுஜித் எப்போது வருவான் என்று பெற்றோரும், நடுகாட்டுபட்டி சுற்றுவட்டார மக்களும்,தமிழக மக்களும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *