தொண்டாமுத்தூர் தொகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினார் அமைச்சர் S.P.வேலுமணி ..!

கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட ராமசெட்டிபாளையம், சென்னனூர் பகுதிகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்களை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

கோவை, ஜன-5

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.2,500 ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கோவை மாவட்ட வழங்கல் துறை சார்பில், கெம்பட்டி காலனி, டவுன்ஹால், குனியமுத்தூர், சுகுணாபுரம், தெலுங்குபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ.2,500 ரொக்கம், விலையில்லா வேட்டி-சேலை வழங்கும் பணியை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று தொடங்கிவைத்தார்.

இதைத்தொடர்ந்து, இன்று (05.01.2021) கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட ராமசெட்டிபாளையம், சென்னனூர் பகுதிகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்களை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொண்ட மக்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நன்றி தெரிவித்தனர்.

இதேபோல், கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி பகுதியில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *