சென்னையில் கொட்டித்தீர்க்கும் கனமழை.. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3,000 கனஅடி நீர் திறப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிகக்கனமழை பெய்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகமானதால், 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

சென்னை, ஜன-5

சென்னையில் கடந்த 8 மணி நேரத்தில் 15.5 செ.மீ. மழையானது பதிவாகியிருக்கிறது. நேற்று நள்ளிரவு முதலே தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் சாலைகள் ஸ்தம்பித்திருக்கின்றன. மழை பொழிவும் அதிகமாக இருக்கிறது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜனவரி மாதத்தில் இந்த மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால் சென்னை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. பிரதான சாலைகளில் அதிகளவு மழைநீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னையில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நீரின் அளவு அதிகரித்திருக்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் முன்னெச்சரிக்கையாக 1000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இருந்தாலும் தற்போது ஏரிக்கு 6,200 கனஅடி நீர் வருகிறது. இதனால் உபரிநீராக 3 ஆயிரம் கனஅடி நீர் தற்போது திறந்து விடப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *