ஜனவரி 13-ந்தேதி முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்த தயார்.. மத்திய சுகாதாரத்துறை

ஜனவரி 13-ந்தேதி முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்த தயார் நிலையில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

டெல்லி, ஜன-5

கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியை செலுத்தும் வேலைகளை கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மத்திய அரசு செய்து வந்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் திட்டத்திற்கான ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த ஒத்திகை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. மேலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கும், சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் ஜனவரி 13-ந்தேதி முதல் இந்தியாவில் கொரோனே தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

டெல்லியில் இன்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, ‘கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பு மருந்துகளின் ஒத்திகை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதால் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்க உள்ளன.கொரோனா தடுப்பூசி செலுத்த அனைத்து மாநிலங்களும் முழு அளவில் தயாராக உள்ளன.அடுத்த 10 நாட்களில் கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு தயாராக உள்ளோம். சென்னை, கர்னல், மும்பை, கொல்கத்தா ஆகிய நான்கு இடங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.இது தவிர நாடு முழுவதும் 37 தடுப்பூசி விற்பனை கூடங்கள் உள்ளன. ஜனவரி 13 முதல் முதற்கட்டமாக கொரோனா முன்களப்பணியாளர்களான மருத்துவத் துறையினருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும்,’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *