பிறந்தநாளில் கனிமொழியை அப்செட்டாக்கிய #HBD_ஊழல்_ராணி ஹேஷ்டேக்..!!

திமுக எம்பி கனிமொழி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், ஊழல் ராணி என்னும் ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

சென்னை, ஜன-5

தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று தனது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார். சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள வீட்டில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து வணங்கி விட்டு தாயார் ராஜாத்தி அம்மாளிடம் ஆசி பெற்றார்.

அதன் பிறகு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கிருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு சென்றார். அங்கு மு.க.ஸ்டாலினிடம் பிறந்த நாள் வாழ்த்து பெற்றார். துர்கா ஸ்டாலினும் கனிமொழிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

அதன் பிறகு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

திமுக எம்பி கனிமொழி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், ஊழல் ராணி என்னும் ஹேஷ்டேக்கை திமுக எதிர்ப்பு அரசியல் கட்சியினர் டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஸ்டேக் இந்திய அளவில் டெர்ண்டாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *