புதிய நாடாளுமன்றம் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி…!

புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

டெல்லி, ஜன-5

புதிய நாடாளுமன்ற கட்டடம், மத்திய தலைமைச் செயலகம் உள்ளிட்டவற்றை கொண்ட சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் 900 முதல் 1,200 எம்.பி.க்கள் அமரக்கூடிய வகையில் கட்டப்படவுள்ளது. அதன் கட்டுமானப் பணிகளை வரும் 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய தலைமைச் செயலகத்தை 2024-ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழ், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், கடந்த நவம்பா் மாதம் 5-ஆம் தேதி வழக்கின் தீா்ப்பை ஒத்திவைத்தது. எனினும் சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு அடிக்கல் மட்டும் நாட்டுவதற்கு கடந்த டிசம்பா் மாதம் 7-ஆம் தேதி அனுமதி அளித்தது. இதையடுத்து அந்த திட்டத்துக்கு டிசம்பா் 10-ஆம் தேதி பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா்.

இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிடம் மற்றும் வளாகம் அமைப்பதற்கு தடை விதிக்ககோரி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு வழங்கிய அந்த தீர்ப்பில் புதிய பாராளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட செண்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிட பணியின் போது தூசி பரவலை தடுக்க கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *