குழந்தை சுஜித்துக்கா பிரார்த்திக்கிறேன் : பிரதமர் மோடி
அக்டோபர்.28
ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுஜித்வில்சன் நலமுடன் மீண்டுவர பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள 2 வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி கடந்த 25ம் தேதி முதல் நான்காவது நாளாக நடைபெறுகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், குழந்தை சுஜித்வில்சனுக்காக பிரார்த்திக்கிறேன்.

சுஜித்தை காப்பாற்றுவதற்கான மீட்பு முயற்சிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்தேன். குழந்தையை பாதுகாப்பாக மீட்க அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.