‘எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி’… விஜய்யை மிரள வைக்கும் தந்தை எஸ்.ஏ.சி.,
சென்னை, ஜன-4

விஜய் ரசிகர் மன்ற அதிருப்தி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ள இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், மீண்டும் புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள எஸ்ஏசியின் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டமும் நடந்துள்ளது. இதில் மன்றத்தின் அதிருப்தி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டுள்ளனர். ஆலோசனைக்கு பிறகு உடனடியாக 20 மாவட்ட பொறுப்பாளர்களையும் எஸ்ஏசி நியமித்துள்ளார்.
இதுகுறித்து எஸ்ஏசி கூறுகையில், ‘‘நிறைய திட்டமிடல்கள் நடந்து வருகின்றன. இது மார்கழி மாதம். இப்போது அதுபற்றி பேச வேண்டாம் என நினைக்கிறேன். தை பிறக்கட்டும். 14-ம் தேதி அனைவரையும் அழைத்து நல்ல சேதி சொல்கிறேன்’’ என்றார்.
கட்சி பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் எஸ்ஏசி ஆதரவாளர்கள் தெரிவித்தனர். ‘எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி’ அல்லது‘அப்பா எஸ்ஏசி மக்கள் இயக்கம்’என்பது கட்சிப் பெயராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.