நாங்க அறிவிக்கும் முதல்வர் வேட்பாளர்தான் தமிழகத்தில் ஆட்சி செய்வார்.. எல்.முருகன் பரபரப்பு
தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கும் முதல்வர் வேட்பாளரே தமிழகத்தில் ஆட்சி செய்வார் என மாநில பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
ராணிபேட்டை, ஜன3

வேலூர் மாவட்டம் ராணிபேட்டையில் இன்று பேசிய எல்.முருகன், தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கும் வேட்பாளரே தமிழத்தில் ஆட்சி செய்வார் என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் பெண்களுக்கு எதிரான நடக்கும் குற்றங்களுக்கு பாஜக ஆட்சியில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். விவசாயிகளின் நண்பனாகவும், தோழனாகவும் விளங்கும் பிரதமர் நரேந்திர மோடிதான் உண்மையான சமூக நீதிக் காவலன் என்றும் எல்.முருகன் கூறினார்.