சுஜித்தை மீட்க மாற்று யுக்தி: துளையிடும் பணி மீண்டும் தொடக்கம்

திருச்சி.அக்டோபர்.28

குழந்தை சுஜித்தை  மீட்பதற்கா ஆழ்துளை கிணற்றின் அருகே தோண்டபட்ட குழியில்  போர்வெல் மூலமாக துளையிடும் பணி மீண்டும் தொடங்கி உள்ளது. 

 திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் 88 அடி ஆழத்தில் சிக்கியுள்ள  குழந்தை சுஜித்தை   மீட்பதற்கான பல்வேறு  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  அதன் முக்கிய கட்டமாக 2 ரிக் இயந்திரங்களை கொண்டு வந்து குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளை கிணற்றுக்கு அருகே  45 அடி  ஆழம் வரை குழி தோண்டப்பட்டது. தொடர்ந்து பாறைகள் இருப்பதால்   குழி தோண்டும்  பணி சவாலாக இருந்தது.  இந்நிலையில் கடினமான பாறைகளை துளையிட ரிக் இயந்திரத்திற்கு பதிலாக ஃபோர்வெல்  இயந்திரன்தின் மூலம் துளையிடும் பணி சுமார் 12.45 மணி அளவில் தொடங்கியது.

முன்னதாக குழிக்குள்  தீயணைப்பு வீரர் ஒருவர் இறக்கப்பட்டு பாறையின் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.  இதனைத் தொடர்ந்து 1750 திறண்கொண்ட இயந்திரத்தின் மூலம் துளையிடும் பணி நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *