வசந்தகுமாரின் மகன் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம்..!தலைவர்களின் மகன்களுக்கு பதவிகள்..!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளராக மறைந்த எம்.பி. எச்.வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை, ஜன-2

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொருளாளர், செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளராக மறைந்த எம்.பி. எச்.வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அன்பரசு உள்ளிட்டோரின் மகன்களுக்கும் கட்சியில் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

குழுவில் கே.எஸ்.அழகிரி, ராமசாமி, சிதம்பரம், திருநாவுக்கரசர், தங்கபாலு, செல்லகுமார், மாணிக்கம் தாகூர், ஜெயக்குமார் எம்.பி., விஷ்ணுபிரசாத், மாயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம், கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, ஜே.எம்.ஹாரூண் ரசீத், பீட்டர் அல்போன்ஸ், சசிகாந்த் செந்தில், சுதர்சன நாச்சியப்பன், தனுஷ்கோடி ஆதித்தன் என 19 பேர் காங்கிரஸ் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *