ஒரு நாளைக்கு 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட முடிவு.. ராதாகிருஷ்ணன் பேட்டி

ஒரு நாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும், தடுப்பூசி போட விருப்பும் நபர்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை, ஜன-2

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை இன்று நடைபெற்றது. தமிழகத்தில் இன்று 17 இடங்களில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை தொடங்கியது. காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை 2 மணி நேரம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்தது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி ஒத்திகையை ஆய்வுசெய்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது;-

கொரோனா தடுப்பூசி போட்டதற்கான குறுஞ்செய்தி அவரவர் செல்போன்களுக்கு அனுப்பப்படும். தடுப்பூசி போடப்பட்டவர்களின் உடலில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா என்பது கண்காணிக்கப்படும். தலைசுற்றல் உள்ளிட்டவை ஏற்பட்டால் அவர்களுக்கு தருவதற்கு மருந்துகள் தயாராக உள்ளன. ஆனால், அப்படி எதுவும் நடக்காது. 0.1 சதவீதம் கூட தவறு நடக்கக்கூடாது என்பதற்காக அனைத்தையும் தயார்நிலையில் வைத்திருக்கிறோம். தடுப்பூசி போட விருப்பும் நபர்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *