நாடு முழுவதும் 2 மணி நேரம் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை
டெல்லி, ஜன-2

இந்தியாவில் முன்னுரிமை அடிப்படையில், டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், மூத்த குடிமக்கள் என 30 கோடி பேருக்கு முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு செய்தது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசியை குழப்பம் இன்றி விரைவாக கொண்டு சென்று மக்களுக்கு செலுத்துவதை உறுதி செய்வதற்காக பஞ்சாப், அசாம், ஆந்திரா, குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து நாளை நாடு முழுவதும் ஜனவரி 2ம் தேதி ஒத்திகை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. ஒவ்வொரு மாநில தலைநகரங்களிலும் குறைந்தது 3 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அதன்படி இன்று நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. காலை 11 மணி வரை 2 மணி நேரம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடக்கிறது. தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் இடங்களில், அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன.