சூலுார் அரசுப் பள்ளியில் உயர் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய மெய்நிகர் வகுப்பறை.. S.P.வேலுமணி திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட சுல்தான்பேட்டை ஊராட்சியில் உள்ள, செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உயர் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய மெய்நிகர் வகுப்பறையை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

சூலுார், ஜன-2

செஞ்சேரி அரசு நடுநிலைப் பள்ளியில், மெய்நிகர் வகுப்பறை துவக்கி வைக்கப்பட்டது. சுல்தான்பேட்டை ஒன்றியம், செஞ்சேரியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பின்லாந்து நாட்டில் பின்பற்றப்படும், மெய்நிகர் வகுப்பறை முறை, இப்பள்ளியில் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, குத்துவிளக்கேற்றி வகுப்பறையை திறந்து வைத்தார். கணினி, நவீன மென்பொருட்கள், வெண்பலகைகள், முப்பரிமாணத்தில் படங்கள் காட்டும் கருவிகள் மற்றும் வீடியோ கான்பரன்சிங் வழியாக கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இந்த வகுப்புகளில் பாடம் சார்ந்த ஒளிப்பதிவுகள், அதற்கென உள்ள பிரத்யேக கருவியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, முப்பரிமாண முறையில் காட்சிப்படுத்தப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படும். மாணவர்கள் எளிதாகவும், ஆழமாகவும் பாடங்களை கற்க முடியும். தமிழகத்தில் முதன்முறையாக, நவீன தொழில்நுட்பங்களை கொண்டு கற்பிக்கும் முறை, இப்பள்ளியில் துவக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *