ஓவைசியை தட்டித்தூக்கிய ஸ்டாலின்.. வரும் 6ம் தேதி திமுக மாநாட்டில் பங்கேற்பு..!!
சென்னையில் வரும் 6ஆம் தேதி திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இதயங்கள் இணைப்போம் மாநாட்டில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் ஓவைசி பங்கேற்கிறார். இ
சென்னை, ஜன-2

திமுகவின் சிறுபான்மை நல பிரிவு சார்பில், வரும் ஜனவரி 6-ஆம் தேதி ‘இதயங்களை இணைப்போம்’ என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய இயக்க தலைவர்கள், உலாமாக்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் நிறுவனரும், ஹைதராபாத் லோக்சபா தொகுதி எம்பியுமான அசாதுதீன் ஓவைசியை திமுகவின் சிறுபான்மை நல உரிமைப் பிரிவின் மாநிலச் செயலாளர் மஸ்தான் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் ‘இதயங்களை இணைப்போம்’ என்ற திமுகவின் மாநாட்டிற்கு வருகை தருமாறு திமுக சார்பில் அழைப்பு விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஓவைசி அந்த மாநாட்டில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுவரை தமிழக அரசியலில் ஓவைசியின் பங்கு பெரிய அளவில் இருந்தது இல்லை. பீகார் அரசியலில் ஓவைசி ஏற்படுத்திய தாக்கத்திற்கு பிறகு இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் நபராக மாறி உள்ளார். திமுக மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் இதன்மூலம், தமிழக அரசியலிலும் ஓவைசியின் பங்களிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் பீகாரில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ஐந்து இடங்களில் ஓவைசியின் கட்சி வெற்றிபெற்றது. பல தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் வெற்றி வாய்ப்புகள் பறிபோக ஓவைசி முக்கிய காரணம் என்று பேசப்பட்டது. இந்நிலையில அண்மையில் ஓவைசி அளித்த பேட்டியில், திமுகவுடன் கூட்டணியில்சேர விரும்புவதாக கூறியிருந்தார். இந்த சூழலில் திமுக சிறுபான்மை நல பிரிவின் மாநாட்டில் கலந்துகொள்ள சம்மதித்து இருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.