பெருமாள் கோவிலை மறைத்து ஸ்டாலின் நடத்தும் நாடக கிராமசபை கூட்டம் – இந்து முன்னணி கடும் எதிர்ப்பு

ஜன-1

கொரோனா பரவலை முழுமையாக தடுக்க தளர்வுகளுடன் ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கிராமசபை கூட்டம் நடத்துவதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் தடையை மீறி ஊர் ஊராக கிராமசபை கூட்டத்தை நடத்துகிறார்.

கிராமசபை என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை நடத்தும் ஸ்டாலின், அந்த கிரrமத்து பிரச்சனைகள் பற்றி பேசாமல் அரசியல் கச்சேரி நடத்தி வருகிறார். இதன் உச்சகட்டமாக ஸ்டாலின் நாளை ஒரு நாடக சபா நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீகாரைச் சேர்ந்த ஐ பேக் குழுவின் யோசனைப்படியே ஸ்டாலினின் ஒவ்வொரு அசைவுகளும் உள்ளன. அந்தக் குழு எழுதியுள்ள நாடகத்தில் ஸ்டாலின் நாளை நடிக்க உள்ளார். அதாவது கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பரமேஸ்வரன் பாளையத்தில் உள்ள கொங்கு திருப்பதி பெருமாள் கோவில் முன்பு நாளை கிராம சபா என்கிற பெயரில் நாடக சபா நடத்த ஸ்டாலின் நிர்பந்திக்கப்பட்டுள்ளார்.

ஐ பேக் குழுவின் கதை, திரைக்கதைக்கு ஒத்திகை பார்க்கப்பட்ட நிலையில் பரமேஸ்வரன் பாளையத்தில் உள்ள கொங்கு திருப்பதி பெருமாள் கோயிலுக்குள் ஸ்டாலின் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுக் கூட்டத்தில் எந்தெந்த விஷயங்களை பேச வேண்டும் என்று ஸ்டாலினுக்கு தினந்தோறும் ஐ பேக் குழு வரிக்கு வரி பாடம் நடத்தினாலும், ஞாபக மறதி காரணமாக உளறுவதை மட்டும் வாடிக்கையாக வைத்திருக்காமல், சில விஷயங்களை சம்பந்தம் இல்லாமல் பேசி எல்லோரையும் குழப்பத்தில் ஆழ்த்திவிடுகிறார்.

பரமேஸ்வரன்பாளையம் கொங்கு திருப்பதி பெருமாள் கோவிலுக்குள் எவ்வாறு செல்ல வேண்டும் என்று ஸ்டாலினுக்கு அந்தக்குழு பாடம் சொல்லிக் கொடுத்துள்ளது. கோவிலுக்குள் சென்றவுடன் கோவில் குருக்கள் பூசும் திருநீறு மற்றும் குங்குமத்தை அவசரப்பட்டு அழிக்காமல், திருநீறு, குங்குமம் அழியாத முகத்துடன் , ஏற்கனவே திட்டமிட்டபடி மீடியாக்களுக்கு போஸ் கொடுக்க வேண்டும் என்று ஸ்டாலினுக்கு அந்தக் குழு அறிவுரை கூறியுள்ளது.

திடீரென்று ஞாபக மறதியால் திருநீறு குங்குமத்தை ஸ்டாலின் அழித்து விட்டால் தங்களுடைய திட்டம் பாழாகி விடுமே என்று அந்தக் குழு டென்ஷனில் உள்ளது. அது மட்டுமில்லை கொங்கு மண்டலத்தில் சிறப்பு வாய்ந்த அந்த பெருமாள் கோயில் முன்பு சினிமா போன்று செட் போட திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்காக அந்தக் கோயிலை மறைக்கும் வகையில் செட் போட்டு . சிவப்புக் கம்பளம் , பச்சைக் கம்பளம் விரிக்கப்பட உள்ளது. கிராமத்துக்கு வந்து எவ்வித உதவியும் செய்யாமல், சினிமா படப்பிடிப்பு போன்று வேலைகள் நடப்பதால் அதிர்ச்சி அடைந்த இந்த பகுதியில் வசிக்கும் அனைத்து சமூக கிராம மக்கள், ஸ்டாலின் கிராமசபை கூட்டத்துக்காக பெருமாள் கோவிலை மறைத்து செட்போட்டு, பக்தர்களின் உணர்வுகளை திமுகவினர் காயப்படுத்துகிறார்கள் என்று புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி லெனின் குமார் என்பவர், காவல் துறையினரிடம் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் இந்துக்கோவில்களையும், இந்து தெய்வங்களையும் தொடர்ந்து கேவலப்படுத்தும் திமுக, தற்போது பரமேஸ்வரன் பாளையத்தில் உள்ள கொங்கு திருப்பதி பெருமாள் கோவில் புனிதத்தன்மையை அவமதிக்கும் வகையில் ஈடுபடுகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் கோவிலை மறைத்து கிராமசபை என்ற பெயரில் ஸ்டாலின் அரசியல் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

எளிமையாக சமுக்காளம் விரித்து மரத்தடியில் நடப்பது தான் கிராமசபை கூட்டம். ஆனால் ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் என்றால் சினிமா சூட்டிங் நடப்பது போன்று வேலைகள் நடப்பதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *