இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.02 கோடியாக உயர்வு…!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,02,86,710- ஆக அதிகரித்துள்ளது. இதனைபோல், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,48,994 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 98,83,461 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி, ஜன-1

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,02,86,710 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 20,036 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 256 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,48,994 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 98,83,461 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 23,181 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,54,254 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மொத்த உயிரிழப்பு 1.45 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 96.08 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *