தமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் நடத்த வாய்ப்பில்லை.. சத்யபிரத சாஹு

கொரோனா காரணமாக கூடுதல் வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டி இருப்பதால் தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவு என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

சென்னை, டிச-31

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, தமிழக சட்டப்பேரவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட வாய்ப்பில்லை. உரிய காலத்தில்தான் தேர்தல் நடத்தப்படும். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. கூடுதல் வாக்குச்சாவடிகள் கண்டறியும் பணி நடைபெற்று வருவதால் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட வாய்ப்பில்லை.தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வழக்கமாக அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 67 ஆயிரத்திலிருந்து 95 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது.
இதற்கு தேவைப்படும் கூடுதல் மின்னணு இயந்திரங்களை மகாராஷ்டிரம் மற்றும் மத்தியப் பிரதேசத்திலிருந்து கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *