ஏம்பல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. குற்றவாளிக்கு மரண தண்டனை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை, டிச-29

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் கிராமத்தில் கடந்த ஜூன் 30-ம் தேதி 7 வயது சிறுமி காணாமல் போய் உள்ளதாக அவரது பெற்றோர் ஏம்பல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர். இந்த புகாரை அடுத்து காவல்துறையினர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அந்த பகுதியில் உள்ள முற்புதரில் 7 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனை அடுத்து உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்காக கொண்டு சென்றனர். இந்நிலையில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதே பகுதியில் உள்ள சாமுவேல் என்ற ராஜா(27) என்பவரை கைது செய்து சிறையில் அடைந்தனர். இதற்கிடையில் அவருக்கு மருத்துவ பரிசோதனைக்கு செய்ய அரசு மருத்துவக்கல்லுரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் தப்பித்தார்.

அதன்பிறகு காவல்துறையினர் ஒருநாள் முழுவதும் தேடி அவரை கண்டுபிடித்து மீண்டும் அவர் மீது 10 சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். குறிப்பாக போக்சோ சட்டம், கொலை குற்றம், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கானது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதாவது குற்றம் நடந்து 6 மாத காலத்திலேயே தற்போது அந்த வழக்கில் மகிளா நீதிமன்ற நீதிபதி சத்தியா தீர்ப்பு வழங்கியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை செய்ததற்காக போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு மரண தண்டனையும், சிறுமியை கொலை செய்த குற்றத்திற்காக மற்றோரு மரண தண்டனையும், மேலும் தடயத்தை அளிக்க முயன்ற குற்றத்திற்காக 7 வருடமும், ரூ.5,000 அபராதமும், அதேபோல் குழந்தையை கடத்தியதாக 7 வருடமும், ரூ.5 ஆயிரமும், மேலும் வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்காக ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *