கோட்டையை கைப்பற்றுவதே பாஜக நோக்கம்.. குஷ்பு அதிரடி

கோட்டையை கைப்பற்றுவதே பாஜக நோக்கம். அதற்கு முன் சேப்பாக்கம் தொகுதியை கைப்பற்ற வேண்டும் என பாஜகவை சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.

சென்னை, டிச-29

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் குஷ்பு பேட்டியளிக்கையில் கூறியதாவது;-

முதல் கூட்டமே மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் என்ன செய்ய போகிறோம் அதுமட்டுமே தற்போது முக்கியமான நோக்கமாக இருக்க வேண்டும். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி, பாஜக வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவர் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும். வேட்பாளர் யாராக இருந்தாலும் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். தற்போது மக்களை சந்தித்து பணியாற்றும் வாய்ப்பு கொடுத்த பாஜக மாநில தலைவருக்கு நன்றி. பாஜகவிற்கு மக்கள் வாக்களித்தால் என்ன பயன் இருக்கிறது என்பது குறித்து மக்களிடம் நாம் கொண்டு செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி பகுதியில் இறங்கி வேலை செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 20 பூத்துகள் இலக்கு வைத்து பணியாற்ற வேண்டும். நம் நோக்கம் கோட்டையாக இருக்க வேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக இருந்து, எந்த ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டாலும் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *