கட்சி தொடங்கமாட்டேன் என ரஜினி அறிவிப்பு.. தலைவர்கள் கருத்து என்ன?

ரஜினி காந்த் கட்சி தொடங்கி அரசியலில் போட்டியிடுவார் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்த நிலையில், இன்று கட்சி தொடங்கவில்லை என அறிவித்த நிலையில், அவரது முடிவு குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை, டிச-29

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி வருகின்ற சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார். டிசம்பர் 31-ந்தேதி கட்சி குறித்து அறிவிக்கப்படும் எனத்தெரிவித்திருந்தார். இதனால் தமிழக அரசியல் சூடுபிடித்தது.

இந்த நிலையில் இன்று ஒரு நீண்ட அறிக்கையை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். அதில் கட்சி தொடங்கவில்லை. கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரமுடியவில்லை என்று தெரிவித்திருந்தார். இது ரஜினி ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ரஜினிகாந்த் முடிவு குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன்: ரஜினியின் அறிவிப்பு ஏமாற்றம் அளித்தாலும், அவரது ஆரோக்கியமே எனக்கு முக்கியம். பிரச்சாரம் முடிந்து சென்னை திரும்பியதும் ரஜினியை சந்திப்பேன்

ஜி.கே.வாசன் : ரஜினிகாந்த் மக்கள் நலன் கருதி நல்லவர்களுக்கு ஆதரவு தர வேண்டும்

அமைச்சர் கடம்பூர் ராஜூ: ரஜினி முடிவு அவரது விருப்பத்தை சார்ந்தது. அதை விமர்சிக்க விரும்பவில்லை. கட்சி தொடங்கவில்லை என்ற ரஜினியின் அறிவிப்பால் எந்த தாக்கமும் ஏற்பட போவதில்லை

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்: ரஜினிகாந்த் அதிமுகவுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டும்

அமைச்சர் ஜெயக்குமார்: ரஜினி எதிர்காலத்தில் அதிமுகவுக்குத்தான் ஆதரவு கொடுப்பார்

சீமான்: ரஜினிகாந்த் தனது உடல்நலனைக் கருத்திற்கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன்

பொன்முடி: உடல்நிலையைக் கருத்தில்கொண்டு ரஜினி அரசியலை விட்டு விலகியிருப்பது நல்லதுதான்

அன்வர் ராஜா: அதிமுக ஆட்சியை ஆதரிப்பார் ரஜினி

தொல். திருமாவளவன்: வறட்டு கவுரவம் பார்க்காமல் ரஜினிகாந்த் ஒரு துணிச்சலான முடிவை நான் வரவேற்கிறேன்

ஆடிட்டர் குருமூர்த்தி: ரஜினி 1996 போலவே ‘வாய்ஸ்’ அரசியலில் ஈடுபடுவார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *