மக்களை கவர்ந்த மாநகராட்சி மாணவிகள்!!!

சென்னை, அக்டோபர்-26

சுத்தமான வீடுகள், சுகாதாரமான வீதிகளை வலியுறுத்தும் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ தூதுவர்களின் விழிப்புணர்வு வீடியோ மக்களின் மனதை தட்டி எழுப்புவதாக உள்ளது. இதில், பங்கேற்ற மாணவிகளுக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளன.

சுற்றுப்புறத்தூய்மை குறித்து மக்களிடையே விழுப்புணர்வு ஏற்படுத்த சென்னை மாநகராட்சியின் பள்ளி மாணவிகள் சுகாதர தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர். தூதுவர்களாக இருக்கும் மாணவிகள் துண்டு பிரசுரங்கள் வழங்குதல், விழிப்புணர்வு ஊர்வலம் செல்லுதல் போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என ஏற்கனவே மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில், இந்த மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பிரச்சார வீடியோ ஒன்றை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் மாணவிகளே வீடுகளையும் வீதிகளையும் சுத்தமாக வைத்திருக்கவும், டெங்கு கொசுக்களை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.  

சுத்தமான சென்னை, சுகாதரமான சென்னை என்ற முழக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் சுற்றுப்புறத்தூய்மைக்கு மக்கள் அளிக்க வேண்டிய பங்களிப்பை மாணவிகள் மிக அழகாக எடுத்துரைக்கிறார்கள்.  

நவியா ஸ்ரீ, சசிகலா தேவி, நந்திதா காந்தி, ஆகிய சுகாதர தூதுவர்கள் இந்த காணொலியில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் உள்ள செய்தி தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்களில் இந்த காணொலி வெளியிடப்பட்டுள்ளது. பிரபலங்கள் கருத்து கூறினால் மட்டுமே பெரும்பாலும் நம் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால், மாநகராட்சி மாணவிகளே திரையில் தோன்றி சுத்தம், சுகாதாரமாக இருக்க வலியுறுத்துவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பொதுமக்களும் ஆர்வமுடன் இந்த காணொலியை கண்டு வருகின்றனர். மாநகராட்சியின் இந்த தூய்மை நடவடிக்கையை மக்களும் பாராட்டி வருகின்றனர். மாணவ தூதுவர்களான நவியா ஸ்ரீ, சசிகலா தேவி, நந்திதா காந்தி ஆகியோர் சென்னை ஷெனாய் நகரில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்த 3 மாணவிகளை பாராட்டி பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்ன வெள்ளத்தாய் இனிப்பு வழங்கினார்.  பிரச்சார விடியோவில் பங்கேற்றுள்ள மாணவிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *