நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிக்க S.P.வேலுமணி உத்தரவு

சென்னை, டிச-29

பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், சென்னை குடிநீர் வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை, நிவர் மற்றும் புரெவி புயல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று (டிச. 28) அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், வடகிழக்கு பருவமழை, நிவர் மற்றும் புரெவி புயல் தாக்கத்தின் போது ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், நகர்ப்புற உள்ளாட்சிகளின் சாலை சீரமைப்பு குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் உத்தரவிட்டார்.

மேலும், அம்மா மினி கிளினிக் சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் ஏற்படுத்த நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், டிச.28 வரை சென்னையில் 38 அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் இதுநாள்வரை 5,864 நபர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன, மாநில ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் சார்பில் வங்கி கடன் இணைப்பு, சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி, சுயஉதவிக் குழுக்களுக்கு கொரோனாவிற்காக வங்கிகள் மூலம் சிறப்பு கடனுதவி, சமுதாய முதலீட்டு நிதி & சுழல் நிதி வழங்குவதற்கு கூடுதல் இலக்கு நிர்ணயித்தல்,

முதியோர் சுயஉதவிக் குழுக்கள் செயல்திட்டம், விவசாயிகளுக்கு 300 டிராக்டர் வாங்குதல் குறித்து ஆய்வு செய்து, அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில் 2020-21ம் ஆண்டு திட்ட இலக்கினை எய்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்ககத்தின் சார்பில் தெருவோர நடைபாதை வியாபாரிகள் அனைவருக்கும் “முத்ரா” திட்டத்தில் கடன் வழங்குதல், நகர்ப்புற சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்குதல், பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு சுழல் நிதி வழங்குதல்,

நகர்ப்புற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க கடனுதவி வழங்கும் நடவடிக்கை, ஊரக புத்தாக்கதிட்டத்தின் சார்பில் #TNRTP திட்டம் விரைவுபடுத்தும் நடவடிக்கை, ஊரக தொழில் மேம்பாட்டிற்காக கொரோனா சிறப்பு நிதிஉதவி தொகுப்புத் திட்டத்தின் நிலை குறித்தும் கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன்.

மேலும் தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனைத்து அலுவலர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *