திமுக நடத்தும் கிராமசபை கூட்டத்தை பார்த்து அதிமுக அரசு அஞ்சுகிறது.. மு.க.ஸ்டாலின்

ராணிப்பேட்டை, டிச-29

ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தலையில் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக கிராம சபை கூட்டங்களையே அதிமுக நடத்தவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். கொலை, கொள்ளை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, ஊழல்களில் அதிமுக அரசு முதலிடத்தில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் கூறியதாவது;

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது இன்றளவும் கேள்விக்குறியாகவே உள்ளது. பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை வீணடித்து அதிமுக அரசு பொய்யான விளம்பரம் செய்து வருகிறது. விளம்பரங்களுக்காக செலவிடப்பட்ட தொகை குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும். கிராம சபை கூட்டங்களுக்கு மக்கள் கூடுவதை பார்த்து அஞ்சி தடை போடுகிறது அதிமுக அரசு. அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் மோசமான நிலையில் உள்ளன. பெண்ணாக இருந்தாலும் தைரியமானவர் என்பதால் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினேன். தேர்தலுக்காகவே ரூ.2,500 பொங்கல் பரிசை தமிழக அரசு வழங்குகிறது. கொரோனா பேரிடர் நிவாரணமாக தலா ரூ.5000 வழங்க வேண்டும். பொங்கல் பரிசு டோக்கனை ரேஷன் கடை ஊழியர்கள் தான் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *