பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி

டெல்லி, டிச-29

பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 6 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா உறுதியானவர்களின் மாதிரி புனே மையத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது. புனே மையத்திற்கு அனுப்பட்ட மாதிரிகளில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. பெங்களூரு மையத்தில் சோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஐதராபாத் மையத்தில் சோதனை மாதிரிகளில் 2 பேருக்கு உருமாறிய கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

கொல்கத்தா, புனே, புவனேஸ்வர், ஐதராபாத், பெங்களூரு, டெல்லி ஆய்வகங்களில் மாதிரிகள் பரிசோதனை நடைபெறுகிறது. பெங்களூரு ஆய்வகத்தில் 3 பேருக்கும், புனே ஆய்வகத்தில் ஒருவருக்கும், ஐதராபாத் ஆய்வகத்தில் 2 பேருக்கும் மாற்றம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா டென்மார்க், ஸ்வீடன் நாடுகளுக்கு பரவியுள்ளது.

நவ.25 முதல் டிச.23 வரை பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய 33,000 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. 33,000 பேரில் 114 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில் அதில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா உறுதியான 6 பேர், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா சோதனைகளை தீவிரப்படுத்தி, மாதிரிகளை ஆய்வகங்களுக்கு அனுப்பிவைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *