உலகின் எடை குறைந்த செயற்கைக்கோளை வடிவமைத்த தஞ்சை மாணவருக்கு S.P.வேலுமணி பாராட்டு
உலகின் எடை குறைந்த செயற்கைக்கோளை வடிவமைத்த தஞ்சை மாணவர் ரியஸ்தீனுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை, டிச-28

தஞ்சாவூா் கரந்தையைச் சோ்ந்தவா் எஸ். ரியாஸ்தீன் (18). இவா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.டெக். மெக்கட்ரானிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் வடிவமைத்துள்ள உலகின் எடை குறைந்த சிறிய செயற்கைக்கோள் 2021- ஆம் ஆண்டில் நாசா விண்வெளித் தளத்திலிருந்து ஏவப்பட உள்ளது.
இந்நிலையில் மாணவர் ரியாஸ்தீனுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, அமெரிக்க தனியார் நிறுவனம் இணைந்து நடத்திய போட்டியில், உலகிலேயே எடை குறைந்த செயற்கைக்கோளை உருவாக்கி வெற்றி பெற்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையை சேர்ந்த சாதனை மாணவர் ரியாஸ்தீன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
இவ்வாறு வேலுமணி குறிப்பிட்டுள்ளார்.