தமிழகத்தில் ஒரே நாளில் 1,005 பேருக்கு கொரோனா..11 பேர் பலி

சென்னை, டிச-28

தமிழகத்தில் மேலும் 1,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 15 ஆயிரத்து 175 ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  • தமிழகத்தில் மேலும் 1,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,15,175 ஆக அதிகரித்துள்ளது.
  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,94,228 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
  • இன்று மட்டும் 1,074 பேர் குணமடைந்துள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 12,059 ஆக உயர்ந்துள்ளது.
  • அரசு மருத்துவமனையில் 6; தனியார் மருத்துவமனையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 285 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • சென்னையில் மொத்தம் 2,24,094 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை 1,39,87,769 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • இன்று மட்டும் 63,242 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 235 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் தற்போது 8,867 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,92,604 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 624 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,22,537 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 381 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை மொத்தம் 34 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    இன்றைக்கு திருநங்கை யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *