விஷப்பரீட்சை வேண்டாம்-பிபின்ராவத் எச்சரிக்கை
சென்னை, அக்டோபர்-26
இந்தியாவுக்கு எதிரான எந்த விஷப்பரீட்சையிலும் இறங்க வேண்டாம் என்று பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பாகிஸ்தான் ஆதரவுடன் தீவிரவாதிகள் இந்தியாவில் அமைதியைக் குலைக்க முயற்சித்து வருவதாக தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்து வந்துள்ளது என்று கூறிய பிபின் ராவத் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிகளான கில்ஜித், பால்திஸ்தான் போன்றவற்றில் தீவிரவாதிகளின் கை ஓங்கியிருப்பதாகவும் தெரிவித்ததார். எத்தகைய தாக்குதலையும் எதிர்கொள்ள இந்தியப் படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் பிபின் ராவத் தெரிவித்துள்ளார். ஆக்ரமிப்பு காஷ்மீர் இப்போது பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் அது தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.