நாடு திரும்பினார் பிரதமர் மோடி

ரஷ்யா, செப்டம்பர்-6
இரண்டு நாட்கள் அரசு முறைப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற இந்தியா-ரஷ்யா இடையேயான 20-வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேங்றார். ரஷ்ய நாட்டின் அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி இரு தரப்பு உறவுகள் மற்றும் துறைசார்ந்த ஒத்துழைப்புகள் குறித்து கலந்து ஆலோசித்துள்ளார்.

இதன் பின்னர் ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்சோ அபே, மங்கோலிய அதிபர், மலேசிய பிரதமர் மகாதீர் முகமது உள்ளிட்ட தலைவர்களையும் பிரதமர் மோடி ரஷ்யாவில் சந்தித்தார். மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை நாடு திரும்பினார்.
முன்னதாக, விளாடிவோஸ்டோக் நகரில் நடைபெற்ற மாநட்டில் பேசிய பிரதமர் மோடி, ரஷ்யாவின் தொலை கிழக்கு பிராந்தியத்தை மேம்படுத்த இந்தியா சார்பில் 7 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி அளிக்கப்பதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.