கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த வீரர்கள் யார்? யார்?.. ஐசிசி விருதுகள் அறிவிப்பு..!

மும்பை, டிச-28

சர்வதேச கிரிக்கெட் களத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் சிறப்பாக கிரிக்கெட் விளையாடிய சிறந்த கிரிக்கெட் வீரர்கள் யார் என்பதை வாக்கெடுப்பு மூலம் கண்டறிந்து அவர்களுக்கு விருது கொடுத்து கவுரவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.

கடந்த பத்து ஆண்டுகளின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த ஒருநாள் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த டி20 வீரர், ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருது என வெவ்வேறு பிரிவுகளில் விருது கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றுள்ளார் இந்திய கேப்டன் கோலி. கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட்போட்டி வீரருக்கான ஐசிசி விருதுக்கு ஆஸ்திரேலியா அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தசாப்தத்தின் சிறந்த ஐ.சி.சி கிரிக்கெட் வீரருக்கான சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதை விராட் கோலி வென்றார். தசாப்தத்தின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை எம்.எஸ்.தோனி வென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *