தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம்.. அதிமுகவை டார்கெட் செய்யும் கமல்ஹாசன்
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் வாங்குவது அதிகரித்துள்ளதாக மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சி, டிச-28

குழந்தை பிறப்பு முதல் குடும்ப அட்டை, பட்டா, சொத்துவரி, மின் இணைப்பு , பிணவறை வரையில் எல்லா துறைகளிலும் லஞ்சம் பெற படுவதாக கமல்ஹாசன் கூறியுள்ளார். அரசு அதிகாரிகள் நிர்ணயித்துள்ள லஞ்ச விலை பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார்.
அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தால் ரூ. 300, ஆண் குழந்தை பிறந்தால் ரூ. 500 லஞ்சம் பெறுகின்றனர். பிறப்பு சான்றிதழுக்கு ஆண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் ரூ. 500, பெண் குழந்தையாக இருந்தால் ரூ. 200 , சாதி சான்றிதழுக்கு தனியாக பெண்ணுக்கு ரூ. 500, ஆணுக்கு 3,000, ஓட்டுநர் உரிமத்திற்கு ஆணுக்கு ரூ.5,000 பெண்களுக்கு ரூ.1000, கடவுசீட்டுக்கு ரூ.500, குடும்ப அட்டைக்கு ரூ.1000, இடபதிவுக்கு ரூ.10,000,பட்டா பரிவர்த்தனைக்கு ஆணுக்கு ரூ.30,000 பெண்ணுக்கு ரூ.5,000, சொத்துவரிக்கு ரூ.5,000, மின் இணைப்புக்கு 15,000, தண்ணீர் இணைப்பிற்கு ரூ.10,000, பாதாள சாக்கடை இணைப்பிற்கு ரூ.5,000, திட்ட அனுமதி பெற ரூ.5,000 முதல் 30,000 வரை, வாரிசு சான்றிதழ் பெற ரூ.500, பிணவறைக்கு ரூ.2,000 கொடுக்கவேண்டும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இவை அனைத்தும் வேறு வழியில்லாமல் கொடுக்கவேண்டும் என்றவர்கள் கொடுக்கக்கூடிய ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதனை மக்களிடம் கொடுத்தது உயர் அதிகாரிகளிடம் கொடுப்பதற்கு சமம் என கருத்துவதாக அவர் தெரிவித்தார்.
மக்களுக்கும் அரசுக்குமான தொடர்பு எளிதா இருக்க லஞ்சம் தவிர்க்க டிஜிட்டல் முறை உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக அரசு மக்களிடத்தில் முதலீடு செய்யும் எனவும், இது மக்கள் நீதிமய்ய கொள்கை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கட்சி தொடங்குவதில் நாடகமாடுகிறாரா ரஜினிகாந்த் என்ற கேள்விக்கு உடல்நலம் தான் முக்கியம் என பதில் அளித்தார். ரஜினிகாந்தின் உடல்நலத்தின் அடிப்படையில் யூகமான தகவல்களை வெளியிடக்கூடாது. ரஜினிகாந்த் உடல்நலம் சரியான பின் கட்சி தொடர்பான பணிகளை தொடங்குவார் என நம்புகிறேன். கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.