ஜி.கே.வாசன் பிறந்த நாள்.. முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் வாழ்த்து
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து கூறியுள்ளனர்.
சென்னை, டிச-28

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் இன்று தனது 56ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதைமுன்னிட்டு பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஜி.கே.வாசனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே. வாசனுக்கு எனது உளமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, வாசன் நீண்ட ஆயுளோடு மகிழ்ச்சியாக பல்லாண்டுகள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று பிறந்தநாள் காணும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு அண்ணன் ஜி.கே. வாசன் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்தி, எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்ட பதிவில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அருமைச் சகோதரர் ஜி.கே.வாசன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளுடன் மக்கள் சேவையில் ஈடுபட பிரார்த்திக்கிறேன். என தெரிவித்துள்ளார்.