ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களை புதுப்பிக்க காலக்கெடு 2021ம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு

ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான காலக் கெடுவை 2021-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி, டிச-28

இதுதொடா்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்தோடு, மோட்டாா் வாகனங்களின் உரிமம், ஓட்டுநா் உரிமம், வாகன பதிவு ஆவணங்களைப் புதுப்பிப்பதற்கான காலக் கெடு 2021-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
இந்த காலக்கெடு நீட்டிப்பு என்பது 2020 பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 2021 மாா்ச் 31-ஆம் தேதி வரை காலாவதியாகும் மோட்டாா் வாகன ஆவணங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.

எனவே, இந்த தேதிகளில் காலாவதியான வாகன ஆவணங்களை 2021-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை செல்லத் தகுந்த ஆவணங்களாக அதிகாரிகள் கருத்தில்கொள்ள வேண்டும். வாகன ஓட்டிகளும், குடிமக்களும் சமூக இடைவெளியைப் பின்பற்றவும், கொரோனா பரவலைத் தடுக்கவும் இது உதவும்.
எனவே, அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இந்த அறிவிக்கையை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *