ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை, டிச-27

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது;-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *