ரஜினியிடம் நலம் விசாரித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ரத்த அழுத்தம் காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்தை தொடர்பு கொண்டு முதல்வர் பழனிசாமி நலம் விசாரித்தார்.

சென்னை, டிச-26

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள், ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அவர்களை இன்று (26.12.2020) தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்கள். மேலும், அவர் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், துணை முதல்வர் ஓ.பி.எஸ். வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச்சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அருமை நண்பர் திரு. ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் முழு உடல் நலம் பெற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *