எச்.ராஜாவை அமைச்சராக்கியே தீருவோம்..அண்ணாமலை சபதம்

எச்.ராஜாவை தமிழக அமைச்சராக்குவோம் என தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

காரைக்குடி, டிச-26

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேர்தல் ஆயத்தப் பணி விழாவில் கலந்து கொண்ட தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை, “விவசாயிகளை கடந்த 70 ஆண்டுகளாக கூன் போட்டு நிற்க வைத்தது காங்கிரஸ் ஆட்சிதான் . மத்திய அரசு வேளாண் சட்டத்தில் துளி அளவு கூட மாற்றம் செய்யாது. அரசியல் அடிப்படை புரிதல் இல்லாமல் ஸ்டாலின் பேசிவருகிறார். வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு திமுக காணாமல் போகும்.
2021 தேர்தலில் எச். ராஜாவை சட்டமன்ற உறுப்பினராக்கி, தமிழக அமைச்சராக்குவோம் என்பதை உறுதியாக சொல்கிறேன். சிவகங்கையில் 4 தொகுதிகளில் நாங்கள் காட்டும் நபர்களை சட்டமன்ற உறுப்பினர் ஆக்குங்கள். முதல்வர் வேட்பாளர் குறித்து தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கூறி வரும் கருத்து திரிக்கப்பட்டு வருகிறது. அவர் தமிழக முதலமைச்சர் குறித்து தேசிய தலைமை மூத்த தலைவர்கள் அறிவிப்பார்கள் என்று கூறி வருகிறார்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *