பாஜக-வில் இணைந்தார் மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம்..!

மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளரான அருணாச்சலம் சென்னையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் அருணாச்சலம் பாஜகவில் இணைந்தார். தொலைநோக்கு சிந்தனையுடன் புதிய வேளாண் சட்டங்களை பாஜக வழிவகுத்து தந்துள்ளது என அருணாச்சலம் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை, டிச-25

மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளரான அருணாச்சலம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். சென்னை கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.

அதன்பின்னர் அவர் கூறியதாவது:

புதிய வேளாண் சட்டங்களை மக்கள் நீதி மய்யம் ஆதரிக்காததால் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தேன். தொலைநோக்கு சிந்தனையுடன் புதிய வேளாண் சட்டங்களை பாஜக வழிவகுத்துத் தந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *