கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்.. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
சென்னை, டிச-25

இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகையை உலகம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) கிறிஸ்தவர்கள் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். அதன்படி தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு தேவாலயங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. முன்னதாக தேவாலயங்களுக்கு வந்த கிறிஸ்தவர்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டது. சிறப்பு திருப்பலியில் பெஞ்ச்களில் 2 நபர்கள் மட்டுமே அமருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.