இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் குறைகிறது..!

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.46 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 1 கோடியை தாண்டியது.

டெல்லி, டிச-24

Maharashtra, Mar 17 (ANI): People wearing masks as a precautionary measure in the wake of coronavirus as they walk outside The Taj Mahal Palace, in Mumbai on Tuesday. (ANI Photo)

நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,01,23,778 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 24,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 312 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,46,756 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96,93,173 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 29,791 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,83,849 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மொத்த உயிரிழப்பு 1.45 சதவீதமாக நீடிக்கிறது. குணமடையும் விகிதம் 95.75 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *