சிறந்த 10 எம்.பி.க்கள் பட்டியலில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் 9-வது இடம்

கொரோனா பொது முடக்கத்தின்போது மக்களுக்கு சிறப்பாக பணியாற்றி சிறந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் தமிழச்சி தங்கபாண்டியன் இடம் பிடித்துள்ளார்.

டெல்லி, டிச-24

கொரோனா பொது முடக்கத்தின்போது மக்களுக்கு சேவையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து டெல்லியைச் சேர்ந்த ஐ சிஸ்டம்ஸ் கடந்த அக்டோபர் 1-ம் தேதி ஆய்வு நடத்த தொடங்கியது. அந்தந்த தொகுதி மக்களின் கருத்துகளின் அடிப்படையில் தற்போது, மக்களுக்கு சேவையாற்றிய முதல் 10 நாடாளுமன்ற உறுப்பினர் பட்டியலை கவர்ன் ஐ தனது www.governeye.co.in/survey/result வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், திமுக தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் இடம் பிடித்துள்ளார்.

பட்டியலில் இடம் பிடித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பின்வருமாறு:

  1. அனில் ஃபிரோஜியா (பாஜக)- மத்தியப் பிரதேசம்-உஜ்ஜைன் நாடாளுமன்ற தொகுதி.
  2. அதலா பிரபாகர ரெட்டி (ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி) – ஆந்திரப் பிரதேசம்- நெல்லூர் நாடாளுமன்ற தொகுதி.
  3. ராகுல் காந்தி (காங்கிரஸ்)- கேரளா-வயநாடு நாடாளுமன்ற தொகுதி.
  4. மஹுவா மொய்த்ரா (திரிணாமூல் காங்கிரஸ்)- மேற்கு வங்கம் – கிருஷ்ணாநகர் நாடாளுமன்ற தொகுதி.
  5. எல்.எஸ். தேஜஸ்வி சூர்யா (பாஜக)- கர்நாடகா- பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற தொகுதி.
  6. ஹேமந்த் துக்காராம் கோட்சே (சிவசேனா)- மகாராஷ்டிரா- நாசிக் நாடாளுமன்ற தொகுதி.
  7. சுக்பீர் சிங் பாடல் (எஸ்ஏடி), பஞ்சாப்- ஃபெரோஸ்பூர் நாடாளுமன்ற தொகுதி.
  8. சங்கர் லால்வானி (பாஜக)- மத்தியப் பிரதேசம்- இந்தூர் நாடாளுமன்ற தொகுதி.
  9. டாக்டர் டி.சுமதி (எ) தமிசாச்சி தங்கபாண்டியன் (திமுக) – தமிழ்நாடு சென்னை தெற்கு நாடாளுமன்ற தொகுதி.
  10. நிதின் ஜெயராம் கட்கரி(பாஜக)- மகாராஷ்டிரா- நாக்பூர் நாடாளுமன்ற தொகுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *