தலைவர்கள் தீபாவளி வாழ்த்து!!!
சென்னை, அக்டோபர்-26
ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ஒளியின் திருவிழாவான தீபாவளி மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் தரும் நாள் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த நன்னாளில் தமிழக மக்களுக்கு தனது மனங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தீப ஒளித் திருநாளான தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும், தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
மேலும் தித்திக்கும் தீபாவளித் திருநாளில், அனைவரது வாழ்விலும் அமைதி தவழட்டும், இன்பம் நிறையட்டும், நலங்களும், வளங்களும் பெருகட்டும் என்றும் முதலமைச்சர் வாழ்த்தியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் கொங்கு ஈஸ்வரன் உள்ளிட்டோரும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.