மின்சார கார் ஆலையை பார்வையிட்டார் எடப்பாடியார்

சான்பிரான்சிஸ்கோ, செப்டம்பர்-6

வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி அமெரிக்காவில் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார் தொழிற்சாலையை பார்வையிட்டார். அங்கு, அவருக்கு மின்சார கார் தொழில்நுட்பம் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.

இதனைத் தொடர்ந்து டெஸ்லா நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், பல்வேறு தனியார் நிறுவனங்கள் மக்களின் போக்குவரத்து சேவையை இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அந்த வகையில் டெஸ்லா கார் நிறுவனம் தமிழகத்திற்கு வந்தால் தமிழக அரசு சார்பாக முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் கூறினார்.

டெஸ்லா நிறுவன அதிகாரிகள், மற்றும் அலுவலர்களுக்கு முதலமைச்சரும், முதலமைச்சருக்கு டெஸ்லா நிறுவனத்தினரும் நினைவு பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்வில், அமைச்சர்கள் எம்.சி.சம்பத், உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *