ஜன.1 முதல் குப்பை கொட்ட கட்டணம்.. சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை மாநகராட்சியில் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல், மாநகராட்சி சார்பில் குப்பைகளை அகற்றும் சேவைக்காக பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம், சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்பட உள்ளது.
சென்னை, டிச-23

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த 2016-ம் ஆண்டு வெளியிடப்பட்ட திடக்கழிவு மேலாண்மை விதிகளை அடிப்படையாகக் கொண்டு, கடந்த 2019-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியால் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் இயற்றப்பட்டுள்ளன. இதற்கு கடந்தஜனவரி 10-ம் தேதி தமிழக அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. அந்த அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டது.
இந்தத் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளின்படி, கழிவைஉருவாக்குபவர்கள் வகைப்படுத்தப்பட்டு, அதற்கேற்ப திடக்கழிவு மேலாண்மைக்கான பயனாளர் கட்டணத்தை (User Charges) சென்னை மாநகராட்சிக்கு செலுத்தவேண்டும். அதை, சொத்து வரியுடன் சேர்த்து வரும் ஜனவரி 1-ம் தேதிமுதல் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டண விவரங்கள், சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்றஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மைதுணை விதிகள் குறித்த 1-வதுஅட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.