சுர்ஜித் போன்ற சோக நிகழ்வுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வேண்டும் – ஸ்டாலின்

சென்னை, அக்டோபர்-26

குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்படவேண்டும், இதுபோன்ற சோக நிகழ்வுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருச்சி மணப்பாறை அருகேயுள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த சிறுவன் ஆழ்துளை கிணற்றிலிருந்து நலமுடன் மீட்க மீட்புக்குழு போராடி வருகிறது. அமைச்சர்களும் அதிகாரிகளும் 17 மணிநேரத்துக்கும் மேலாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “மனம் கனக்கிறது! குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும். அவரது குடும்பம் துடிப்பதைப் போல் நாமும் துடிக்கிறோம். அரசு இயந்திரம் முழுமையாகச் செயல்பட்டு அந்த உயிரை மீட்டாக வேண்டும். தொடர்ச்சியாக இதுபோன்ற சோக நிகழ்வுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *