உலகத்திற்கே படியளக்கும் உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி.. முதல்வர் ட்வீட்

உலகத்திற்கே படியளக்கும் உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை, டிச-23

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேசிய விவசாயிகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

“உழந்தும் உழவே தலை”

உலகின் தலையாய தொழிலான உழவுத்தொழில் செய்துவரும் விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த “தேசிய விவசாய தின நல்வாழ்த்துகளை” அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகத்திற்கே படியளக்கும் உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன்.

உலகின் அனைத்து மனித உயிர்களுக்கும் உணவளிக்கும் கடவுள்களின் தினமான தேசிய விவசாயிகள் தினத்தில், தேசத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமான நம் விவசாய பெருமக்களை இன்றுபோல் என்றும் அரவணைப்போம் என தாய்த்தமிழ் உறவுகள் உறுதியேற்போம்.

என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *