காடுவெட்டி ஜெ.குருவின் படத்துக்கு உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை
அரியலூர், டிச-23

அரியலூர் மாவட்டம் காடுவெட்டி யில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குருவின் படத்துக்கு திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி கிராமத்துக்கு நேற்று வந்த உதயநிதி ஸ்டாலின், மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குருவின் இல்லத்துக்குச் சென்று அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், குருவின் தாயார் கல்யாணியிடம் ஆசி பெற்றார். குருவின் மகன் கனலரசனையும் சந்தித்துப் பேசினார்.
