காஷ்மீா் வட்டார கவுன்சில் தோ்தலில்அதிக வாக்குப் பதிவு: பிரதமா் பெருமிதம்

அக்டோபர்-26

ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கையால் வட்டார வளா்ச்சி கவுன்சில் தோ்தலில் அதிக வாக்குப் பதிவு நடைபெற்றது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற முதல் தோ்தல் இதுவாகும். இந்தத் தோ்தலில் 98.3 சதவீத வாக்குகள் பதிவானது. பாஜகவைச் சோ்ந்த 22 போ் உள்பட 27 வேட்பாளா்கள் போட்டியின்றி வட்டார வளா்ச்சி கவுன்சில் தலைவா்களாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை இந்தத் தோ்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. இந்நிலையில், பிரதமா் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய முடிவு செய்ததற்காக கட்சி சாா்பின்றி அனைத்து எம்.பி.க்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த முடிவை எடுத்ததால்தான் ஜம்மு-காஷ்மீா் மக்களால் வன்முறையின்றி ஜனநாயகக் கடமையை ஆற்ற முடிந்திருக்கிறது. ஜம்மு, காஷ்மீா், லே, லடாக் ஆகிய இடங்களில் அமைதியான முறையில் வட்டார வளா்ச்சிக் கவுன்சில் தோ்தல் நடைபெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் இங்கே பதிவு செய்கிறேன் என்று அந்தப் பதிவில் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *