தமிழகத்தில் குறையத்தொடங்கும் கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் இன்று புதிதாக 1071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, டிச-21

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி, தமிழகத்தில் இன்று 1071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 07, 962 ஆக அதிகரித்துள்ளது.

  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,86,472 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 1,157 பேர் குணமடைந்துள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,995 ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 325 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,22,258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை 1,35,23,032 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • இன்று மட்டும் 63,016 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 235 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் தற்போது 9,495 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,88,207 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 656 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,19,721 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 415 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை மொத்தம் 34 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
  • வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்தவர்களில் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • வெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்தவர்களில் யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *