ராஜேந்திர பாலாஜி எந்த தொகுதியில் நின்றாலும் தோற்பது உறுதி.. அதிமுக எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சட்டமன்றத் தேர்தலில் தோற்பது நிச்சயம் என்று அதிமுக எம்,எல்.ஏ., ஒருவரே கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தூர், டிச-21

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான ராஜேந்திர பாலாஜி தமிழக பால்வளத்துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதிமுகவைச் சேர்ந்த சாத்தூர் தொகுதி எம்,எல்.ஏவான ராஜவர்மனுக்கும் இடையே உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது.

இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சட்டமன்றத் தேர்தலில் தோற்பது நிச்சயம் என்று அதிமுக எம்,எல்.ஏ., ராஜவர்மன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராஜவர்மன், ‘விருதுநகர் மாவட்டத்தில் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சட்டமன்றத் தேர்தலில் தோற்பது நிச்சயம்; அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தது போனில் பேசியதற்கான ஆடியோ ஆதாரம் உள்ளது’ என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். மேலும், தனக்கு பிடிக்காதவர்களை ஒழிப்பதற்காக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி என்ன வேண்டுமானாலும் செய்வார். அவர் கூடவே இருந்ததால் அவரைப் பற்றிய அனைத்து விவகாரங்களும் தனக்கு அத்துப்படியாக தெரியும் எனக் கூறியிருக்கிறார். திருச்செந்தூர் முருகன் மீது சத்தியமாக தாம் சொல்வது உண்மை என்றும் மாலை போட்டுக்கொண்டு பொய் பேசவேண்டிய அவசியம் தனக்கு இல்லை எனவும் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *